Latest News

September 15, 2015

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடாதிபதியாக மருத்துவர் ரவிராஜ் தெரிவு!
by Unknown - 0

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட பீடாதிபதியாக சிரேஷ்ட சத்திர சிகிச்சை நிபுணரும் மருத்துவபீட சத்திரசிகிச்சைத் துறைத் தலைவருமான வைத்தியகலாநிதி சுப்பிரமணியம் ரவிராஜ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய இவர் பின்னர் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராக இணைந்து கொண்டார். போர் நெருக்கடி மிகுந்த காலங்களில் யாழ்.போதனா வைத்தியசாலை சிரமங்களுக்கு மத்தியில் இயங்கியபோது அதன் பதில் பணிப்பாளராகவும் கடமையாற்றியிருந்தார். 

தற்போது மருத்துவபீடத்தின் பீடாதிபதியாக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று மருத்துவபீடத் தரப்புத் தெரிவித்தது. அதேவேளை 3 வருடங்களுக்கு ஒருதடவை பீடாதிபதித் தெரிவு இடம்பெறுகின்றது.    
« PREV
NEXT »

No comments