Latest News

September 15, 2015

உள்நாட்டு விசாரணை கட்டமைப்பில் சிக்கல் உள்ளது- குணதாச அமரசேகர
by Unknown - 0

போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாக கூறப்படும் குற்றங்கள் சம்பந்தமான விசாரணை நடத்த இலங்கை அரசாங்கம் முன்வைத்துள்ள உள்நாட்டு விசாரணை கட்டமைப்பு தொடர்பான விடயத்தில் சிக்கல்கள் இருப்பதாக சிங்கள தேசிய அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு கண்காணிப்பின் கீழ் நடத்தப்படும் இந்த விசாரணைகளில் எவ்விதமான தேசிய தன்மையும் இல்லை என ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

அதேவேளை இலங்கை சம்பந்தமாக ஐ.நா மனித உரிமை ஆணையாளரினால் நாளை முன்வைக்கப்பட உள்ள அறிக்கையில் இராணுவத்தினருக்கு எதிராக பாரதூரமான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் ஆபத்து இருப்பதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அவ்வாறு நடந்தால், பொறுப்பில் இருந்து விலகி கொள்வது தொடர்பான தனிப்பட்ட யோசனை ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே உதய கம்மன்பில இதனை குறிப்பிட்டுள்ளார்.
« PREV
NEXT »

No comments