Latest News

August 28, 2015

வரலாற்றுப் புகழ் மிக்க செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா இன்று
by admin - 0

வரலாற்றுப் புகழ் மிக்க செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா இன்று  வெள்ளிக்கிழமை பகல் மிகவும் பக்திப் பரவசமாக இடம்பெற்றது.

அதிகாலையில் இடம் பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து அடியவர்களின் அரோகரா கோசத்தின் மத்தியில் முருகப்பெருமான் அழகிய திருத் தேர் ஏறி அடியவர்களுக்கு காட்சியளித்தார்.


யாழ் குடாநாட்டின் பல பகுதிகளிலும் இருந்து இடம்பெற்ற இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் மினிபஸ்வண்டிகளின் சேவையுடன் அதிக எண்ணிக்கையான அடியவர்கள் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டார்கள்.

இத்துடன் புலம்பெயர் நாடுகளிலிருந்து வந்த அதிக எண்ணிக்கையானவர்களும் கலந்து கொண்டார்கள்.

அடியவர்கள் கற்பூரச் சட்டி எடுத்தும் அடியடித்தும் அங்கப்பிரதட்டை செய்தும் தூக்கு காவடிகள் பறவைக்காவடிகள் மற்றும் சப்பாணிக் காவடிகள் எடுத்தும் தமது நேர்த்திக் கடன்களை நிறைவு செய்தார்கள்.

பொலிஸார், சாரணர் இயக்கம், சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ், தொண்டர் படையினர் இணைந்து ஒழுங்கு படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள்


























« PREV
NEXT »

No comments