Latest News

August 28, 2015

பயங்கரவாத சட்டம் நீக்கப்படமாட்டாது
by admin - 0

தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவோ அல்லது மாற்றியமைக்கவோ இன்னும் தீர்மானிக்கவில்லை என இலங்கை அறிவித்துள்ளது.

தேர்தலுக்கான கண்காணிப்பு அமைப்பான கபே, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அண்மையில் விடுத்திருந்தது.

இதுவே மனித உரிமை மீறல்களுக்கு இடமளித்தது என்றும் கபே சுட்டிக்காட்டியிருந்தது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

தற்போதைக்கு அரசாங்கம், தகவல்களை தெரிந்து கொள்ளும் உரிமை சட்டமூலம் மற்றும் தேசிய கணக்காய்வு சட்டமூலம் ஆகிய விடயங்களிலேயே கவனம் செலுத்துவதாக விஜயதாஸ குறிப்பிட்டுள்ளார்.
« PREV
NEXT »

No comments