Latest News

August 19, 2015

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை மகிந்த ஏற்கமாட்டார்?
by Unknown - 0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள மாட்டார் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.   நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மகிந்த ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் போதிலும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.   

ஜனாதிபதி மைத்திரிபால சிறினவுடன் தேவையற்ற முரண்பாடுகளைத் தவிர்த்துக் கொள்ளும் நோக்கில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். 

ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் முரண்பாட்டை தவிர்க்குமாறு முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் மஹிந்தவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.   இதன்படி நிமால் சிறிபால டி சில்வாவே எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1ம் திகதி கூடவுள்ள புதிய நாடாளுமன்றின் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சபாநாயகராக மீளவும் சமல் ராஜபக்ஷவைத் தெரிவு செய்யும் முனைப்புக்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
« PREV
NEXT »

No comments