நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளதாக அமைச்சர் ரவி கருணாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கமைய ரணில் விக்கிரமசிங்க நாளை பிரதமராக பதவியேற்கவுள்ளதுடன், புதிய அமைச்சரவையும் அமைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 106 ஆசனங்களைக் கைப்பற்றி முன்னிலை பெற்றதோடு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 95 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது.
இந்நிலையில், ஆட்சி அமைப்பதற்காக ஐ.தே.கக்கு மேலதிகமாக 7 ஆசனங்கள் தேவைப்படும் நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு கொடுக்கவுள்ள அதேவேளை அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
No comments
Post a Comment