Latest News

August 07, 2015

சர்வதேச விசாரணையில் மாற்றமில்லை!
by Unknown - 0

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர், எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தில் மாற்றமில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இன்று வலியுறுத்தியது. 

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை உத்தியோகபூர்வமற்றது எனவும் அந்த அறிக்கை உண்மையானதா அல்லது பொய்யானதா என்பது தொடர்பில் கூற முடியாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

குற்றச்சாட்டுக்களுக்கு இலக்கானவர்களால் அக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது சுமந்திரன் மேலும் கூறினார்.

ஆனால் இவர் சர்வதேச விசாரணையை முன்னர் மறுத்திருந்தமை குறிப்பிடதக்கது
« PREV
NEXT »

No comments