கட்சியின் தலைவர் இன்றி ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவை கூட்டுவதற்கு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவு மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்ட நீதிபதி ஹர்ஷ சேதுங்க முன்னிலையில் குறித்த முறைப்பாடு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், இந்த வழக்கு விசாரணை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் பிரசங்க சோலங்கராச்சியினால் குறித்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டது.
கட்சியின் யாப்பிற்கு அமைய மத்திய செயற்குழுவை கூட்டுவதற்கு கட்சி தலைவருக்கு மாத்திரமே உரித்துள்ளதாக அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்சியின் விதிமுறைக்கு மாறாக சிலர் செயற்பட முயற்சிப்பதாகவும், பிரசங்க சோலங்கராச்சி முன்வைத்துள்ள முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
No comments
Post a Comment