பேய்கள் இருப்பது உண்மையா.?? இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.??
அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...?? அவ்வாறெனில், தினமும் இலட்சக்கணக்கில் இறைச்சிக்காகக் கொல்லப்படும் ஆடுகள், மாடுகள்,கோழிகள், மீன்களின் பேய்கள் ஏன் வருவதில்லை???
இதுவரையும், ஒரு மாட்டின் பேயை, ஒரு ஆட்டின் பேயை, ஒரு கோழியின் பேயை எவர் பார்த்ததுண்டு???
மனிதர்களில் இறந்தவர்களுக்காக ஆத்மா சாந்தியடைய பல வகைகளில் பல பூசைகள், கிரியைகள் செய்தும் பல மூட நம்பிக்கையாளரின் குருட்டுக் கண்களுக்கு பல வடிவங்களில் பல பேய்கள் உலாவும் போது...
கதறக் கதற ஈவிரக்கமின்றி கொலை செய்யப்படும் மிருகங்கள் பறவைகளின் உயிர்களின் ஆத்மா சாந்தியடைய எதுவுமே செய்யாமல்... அந்த மிருகங்கள், பறவைகள் பேய்கள் பற்றி இதுவரையும் யாரும் அறிந்ததுமில்லை... நேரடியாகப் பார்த்ததுமில்லை!!!!
எந்தவித கிரியைகளும்... பூசைகளும் செய்யாமல் இந்த உயிரினங்களின் ஆத்மா சாந்தியடையும் போது... இறந்து போன மனிதர்களுக்கு மட்டுமே ஏன் ஆத்மா சாந்தியடைய எனச் சொல்லிக் கொண்டு பல கிரியைகள்... பல பூசைகள் செய்ய வேண்டும்??
ஒருவேளை அந்தப் பூசைகள்... கிரியைகள் செய்வதால்தான் மனிதப் பேய்கள் வருகிறதோ???
கிரியைகள்... பூசைகளை நம்புவதா??? அல்லது பேய்களை நம்புவதா????
நவீன விஞ்ஞான உலகத்தில் ஆடைகள் அணிந்த உடலை ஊடுருவி நாளங்கள், நாடிகள், எலும்புகள் எனத் தொடர்ந்து இன்னும் பல பல காட்சிகளை படமாக்கி கொள்ள பல படப்பிடிப்புக் கருவிகள் வந்துள்ள போதும் ஏன் இதுவரை ஒரு பேயைப் படம்பிடித்து அந்தப் பேயிடமிருந்து ஒரு நேர்காணலை எந்தவொரு விஞ்ஞானிகளும் செய்ததில்லை???
உயிருடன் இருக்கும் ஒரு சக்தியும் இல்லாத மனிதனானவன் எல்லாமற்று இறந்து போன பின்பு, பேயாகி சக்தி படைத்து வருகிறதோடு பலரையும் பயமுறுத்தி பழி வாங்குகிறான் என்றால்....
ஏன் உயிருடன் இருக்கும் போது அந்தச் சக்தி அவனுக்குக் கிடைப்பதில்லை??? அப்படி ஒரு சக்தி பேய்களுக்கு கிடைக்குமெனில், அனைவரும் இறந்துபோனால் சக்தி கிடைத்த மனிதராகலாம் அல்லவா???
சரி... சக்தி கிடைத்த பேய்கள் எப்போது இறக்கும்???
அவ்வாறு இறக்காது என்றால்... ஒவ்வொரு தெருக்களிலும் சக்தி படைத்த பேய்களின் கூட்டமே கும்மாளம் அடித்துத் திரியுமே???
அப்படி கும்மாளம் அடித்து அட்டகாசம் செய்த பேய்களை ஏன் யாருமே பார்க்கவில்லை???
சக்தி வாய்ந்த பேய், தனக்குத் தேவையானவற்றை தானே தனது சக்தியால் எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே..??? எதுக்கு பயந்து, கோழைகள் போல் இன்னொருவர் மூலம் கேட்க வேண்டும்???
பேய்க்கு அருகில் போனால்... பேய் பிடித்து விடுமெனில், பேய் பிடித்தவரின் அருகில் நிற்கும் போது ஏன் யாரையும் பேய் பிடிப்பதில்லை???
இரவில் மட்டுமே பேய் வரும் என்றால், எவ்வாறு இன்னொருவரைப் பிடித்து பகலில் வந்து விசர் ஆட்டம் ஆட வேண்டும்???
முள்ளிவாய்க்கால் மண்ணிலே ஒன்றரை இலட்சம் மக்கள் விதவிதமாகக் மிகவும் கொடூரமாகக் கொல்லப்பட்டும், எந்தவிதமான கிரியைகளும் செய்யாமலே புதைக்கப்பட்டார்கள்!
இன்று அந்த வன்னிக் காட்டுப்பகுதியில் பழையபடி நம் உறவுகள் போய் குடி அமைத்து நன்றாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், அங்கு ஆத்மா சாந்தியடையாத பேய்களை இதுவரையும் யாருமே கண்டதில்லையே, ஏன்???
மசூதிகள் இசுலாமியர்களுடையது, கோவில்கள் இந்துக்களுடையது. இவ் ஆலயங்களில் மட்டும் பேய்களை விரட்டிக் கொண்டு இருக்கிறார்கள் என்றால், கிருத்தவர்களின் தேவாலயங்களில் மட்டும் ஏன் பேய்களை விரட்டுவதில்லை??? அவ்வாறெனில், அவர்களுக்குப் பேய் பிடித்தால்... அவர்கள் எங்கு போவார்கள்?
சரி ஒரு பேயை ஓட்ட மசூதிகள்... கோவில்கள் உண்டெனில்... மசூதி, கோவிலுக்கு சக்தி இருக்கிறதெனில்... ஏன் பேய் வந்து பிடிக்காமல் இருப்பதற்காக சம்மந்தப்பட்ட கோவில்களால் எதுவுமே செய்ய முடியாமல் இன்றுவரையும் உள்ளது?
சக்தி வாய்ந்த கோவில்களில் வைத்து, சக்தி வாய்ந்த பேய்களை ஓட்ட முடியுமெனில், கோவில்கள் வன்னி மண்ணில் பல நூறு இருந்ததும் (சிறு சிறு கோவில்கள் உட்பட) பேய் ஓட்ட சக்தி வாய்ந்த கோவில்களால் பேயை விட சக்தி குறைந்த (மந்திர சக்தி) குண்டுகளை ஏன் விரட்ட முடியாமல் அந்தக் குண்டுகளிலாலேயே கோவில்களும் அழிந்து போனது???
ஒரு கோவிலில் சிலையாக இருக்கும், ஒரு சாமி சிலையை பெயர்த்தெடுத்து ஒரு சாதாரண சக்தி இல்லாத மனிதன் திருடிக் கொண்டு ஓடி விடுகிறான். அவ்வாறெனில், சக்தி வாய்ந்த பேயை விரட்ட முடிந்த சாமியால் சாதாரண மனிதனிடமிருந்து ஏன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போனது???
அவ்வாறான சாமியே பொய்யாக இருக்கும் போது, பேய்கள் மட்டும் எப்படி உண்மையாக இருக்க முடியும்???
இல்லாத பேய்களை விரட்டும் கோவில்கள் மட்டும், எப்படி உண்மையாக இருக்கு முடியும்??
ஒருசிலர் பேயை உண்மையிலேயே பார்த்தேன் என்பார்கள்... அது, அதிக பயத்தின் காரணமாக பேயாக நினைத்து ஒரு உருவத்தைப் பார்த்து, மிகவும் பயந்து அதனால் மனதில் ஏற்படும் அதிக அழுத்தம் காரணமாக உண்டாகும் ஒரு பயமும், பதற்றமும் நம்மை மிரள வைத்து பேய் பிடித்தவன் போல் ஆகிவிடுகிறோம்..!
பின்பு, நவீன மருத்துவத்தை நம்பாமல் போலிச் சாமியாரிடம் போய் நாம் மாட்டிக் கொண்டு பேய் பிடித்து விட்டது என்று நம்பித் தொலைக்கிறோம்!!!
மின்சாரமே இல்லாத வன்னி மண்ணில் வாழ்ந்த சிறு தொகை மக்களை விட மற்ற அனைத்து மக்களும் காட்டுப் பிரேசங்களில்தான் வாழ்ந்தார்கள். (காடு என்றால் காடு அல்ல... காட்டை அண்டிய பகுதிகள்) தினமும் பல மக்கள் பல மாதிரி குண்டு வீச்சுக்களால் இறந்து போனார்கள்!!! ஆனால், அந்த பதற்றம் நிறைந்த நேரங்களில் இறந்தவர்களுக்காக எந்தவிதமான கிரியைகளும் யாரும் செய்ததில்லை!
இருந்தும் அந்த வன்னி மண்ணிலே பேய்கள் வந்ததில்லை!!! காரணம், அந்த மண்ணிலே வாழ்ந்த மக்கள் சாதிகளை, மதங்களை, மூட நம்பிக்கைகளை மறந்து... தாய் மண்ணின் விடுதலையே இலக்கு என்று வாழ்ந்தார்கள்!! அதனால் அவர்களுக்குப் போலியான எந்தப் பேய்களும் தெரிவதில்லை! !
மின்சாரமே இல்லாத காட்டுப் பகுதியில் நிறைய உயிர்கள் இறந்தும், எந்தவிதமான கிரியைகளும் செய்யாமல் பேய்களே வராமல் இருக்கும் போது... எப்போதும் மின்சாரம் இருக்கும் உங்கள் ஊரில் பேய்கள் வருவது என்பது வெறும் மூட நம்பிக்கையே!!!
- வல்வை அகலினியன்.
(இந்தப் பதிவானது எனக்குத்தோன்றிய எண்ணங்களே தவிர, ஆராய்ச்சிப் பதிவு அல்ல... ஆராய்ச்சி செய்யுமளவிற்கு நான் அறிவாளியும் அல்ல)
2 comments
ஒரு பிறவிக்குருடனுக்கு ஒளியை எப்படி காட்டமுடியும்,அல்லது எப்படி விளங்கப்படுத்த முடியும். அதுபோல்தான் ஆன்மிகம் சம்பத்தப்பட்ட விடயங்களை விஞ்ஞான முறையில் எப்போதுமே நிறுவ முடியாது, அது எமது ஐம்புலன்களுக்கும் அப்பாற்பட்டது. என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
அடுத்து பேய் என்பது வேறு, இறந்தவர்களின் ஆவி அல்லது உயிர் என்பது வேறு. கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய் பல்மிருகமாகி பறவையாய் பாம்பாகி என்று மாணிக்கவாசக சுவாமிகள் பாடியிருக்கிறார், அதன்படி பேய் என்பது ஒருவகை பிறப்பு ஆகும்.
பொதுவாக இறந்தவர்களின் ஆவி குறிப்பிட்ட காலத்துக்குள் தான் போகவேண்டிய இடத்துக்கு பயணத்தை மேற்கொண்டு விடும். விதிவிலக்காக சில உயிர்கள் மட்டும் தங்கள் பயணத்தை தாமதப்படுத்தி இங்கே அலைந்து திரியும், அவைதான் நீங்கள் சொன்ன குழப்பம் விளைவிக்கும் ஆவிகள். அவைகளை சாந்தப்படுத்தினால் குழப்பம் செய்யாமல் தங்கள் பயணத்தை ஆரம்பிக்கும் என்று சொல்லப்படுகிறது. இதைப்பற்றி மேலும் அறிய இந்துசமைய ஆன்மீக நூல்களை ஆராயுங்கள்.விஞ்ஞானத்தால் பதில் சொல்ல முடியாது.
ஒரு பிறவிக்குருடனுக்கு ஒளியை எப்படி காட்டமுடியும்,அல்லது எப்படி விளங்கப்படுத்த முடியும். அதுபோல்தான் ஆன்மிகம் சம்பத்தப்பட்ட விடயங்களை விஞ்ஞான முறையில் எப்போதுமே நிறுவ முடியாது, அது எமது ஐம்புலன்களுக்கும் அப்பாற்பட்டது. என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
அடுத்து பேய் என்பது வேறு, இறந்தவர்களின் ஆவி அல்லது உயிர் என்பது வேறு. கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய் பல்மிருகமாகி பறவையாய் பாம்பாகி என்று மாணிக்கவாசக சுவாமிகள் பாடியிருக்கிறார், அதன்படி பேய் என்பது ஒருவகை பிறப்பு ஆகும்.
பொதுவாக இறந்தவர்களின் ஆவி குறிப்பிட்ட காலத்துக்குள் தான் போகவேண்டிய இடத்துக்கு பயணத்தை மேற்கொண்டு விடும். விதிவிலக்காக சில உயிர்கள் மட்டும் தங்கள் பயணத்தை தாமதப்படுத்தி இங்கே அலைந்து திரியும், அவைதான் நீங்கள் சொன்ன குழப்பம் விளைவிக்கும் ஆவிகள். அவைகளை சாந்தப்படுத்தினால் குழப்பம் செய்யாமல் தங்கள் பயணத்தை ஆரம்பிக்கும் என்று சொல்லப்படுகிறது. இதைப்பற்றி மேலும் அறிய இந்துசமைய ஆன்மீக நூல்களை ஆராயுங்கள்.விஞ்ஞானத்தால் பதில் சொல்ல முடியாது.
Post a Comment