Latest News

August 07, 2015

செல்வந்தன் திரை விமர்சனம்!
by Unknown - 0

தெலுங்கு திரையுலகின் இளவரசனாக வலம் வரும் மகேஷ் பாபு முதன்முறையாக தமிழ், தெலுங்கில் வெளியாகியுள்ள திரைப்படம் செல்வந்தன்.கடைசியாக நடித்த சில படங்கள் தொடர் தோல்வியை தழுவ இப்படத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இறங்கி அடித்துள்ளார் மகேஷ் பாபு.

ஸ்ருதிஹாசன், ஜகபதி பாபு, சம்பத்ராஜ், பிரேமானந்தம் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தை பிரபல இயக்குனர் கொரடலா சிவா இயக்கியுள்ளார்.

படத்தின் கதை

மிகப்பெரும் கோடிஸ்வரனாக வலம்வருபவர் ஜகபதி பாபு. இவரது ஒரே மகன் மகேஷ் பாபு வெளிநாடுகளில் படித்து நாடு திரும்புகிறார். தொழிலில் விருப்பம் இல்லாமல் திரியும் இவர் ஸ்ருதிஹாசனை சந்திக்கிறார்.

பார்த்ததும் காதல் பற்றிக்கொள்ள ஒரு கட்டத்தில் தான் யார் என்பதை ஸ்ருதிஹாசனுக்கு மகேஷ்பாபு சொல்ல காதலை மறுக்கிறார்.என்னுடைய தாத்தா அவர்களது சொந்தம் பற்றி தெரியும், பணக்காரனாக இருக்கும் உனது பூர்வீகம் பற்றி தெரியுமா என்று கேட்கிறார்.அதன் பின்னர் தனது சொந்த ஊருக்கு செல்கிறார். அங்கே ஊரில் ஏகப்பட்ட பிரச்சனைகள், மேலும் தனது தந்தை தொழிலிலும் ஒரு பிரச்சனை, ஸ்ருதிஹாசனின் காதல்.இது அனைத்திலும் வெற்றி பெற்றாரா என்பதே மீதிக்கதை.

நடிகர், நடிகைகள்

பெண்கள் ரசிக்கும் விதமாக மகேஷ் பாபு மிக அழகாக பளிச்சிடுகிறார். ஆக்ஷனிலும் பின்னி எடுக்கிறார். ஸ்ருதிஹாசனும் தனது பங்கை வெளிப்படுத்துகிறார். ஆனால் அவருக்கு கிராமத்து வேடம் பொருந்தவில்லை. ஜகபதி பாபு தான் அனுபவ நடிகர் என்பதை வெளிப்படுத்துகிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

தேவிஸ்ரீ பிரசாத் தனது வழக்கமான அதிரடி இசையில் மிரட்டியுள்ளார். மதியின் ஒளிப்பதிவு ரசிக்கும்படி அமைந்துள்ளது. சண்டைக்காட்சிகளில் அனல் அரசு பின்னி எடுத்துள்ளார். தனது திறமையான திரைக்கதையால் மெருகேற்றியுள்ளார் இயக்குனர் கொரடலா சிவா.

க்ளாப்ஸ்

அதிரடியான வசனங்கள், ஜகபதிபாபுவின் ப்ளாஷ்பேக் காட்சிகள். இடைவேளைக்கு முந்தைய மற்றும் இரண்டாம் பாதி காட்சிகள்.

பல்ப்ஸ்

யூகிக்க கூடிய கதை, முதல் பாதி காட்சிகள், ஸ்ருதிஹாசனின் மேக்அப்பை குறைத்திருக்கலாம்.

மொத்தத்தில் மீண்டும் ரசிகர்களின் பிரின்ஸ் ஆனார் இந்த செல்வந்தன்
« PREV
NEXT »

No comments