Latest News

August 21, 2015

பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப் பிரமாணம் இன்னொரு தேசத்துக்கு இடமில்லை கஜேந்திரகுமாருக்கு எச்சரிக்கை - மஹிந்த ராஜபக்ஸவும் பங்கேற்பு
by admin - 0

புதிய அரசாங்கத்தின் பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ரணில் விக்ரமசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.


ரணில் விக்ரமசிங்க நான்காவது தடவையாக பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி செயலகத்தில் இந்தப் பதவிப் பிரமாண நிகழ்வு நடைபெற்று வருகின்றது.


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும் பதவிப் பிரமாண நிகழ்வில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.



நாட்டுக்குள் இன்னொரு தேசத்துக்கு இடமில்லை: ரணில்

 பிரதமாராக பதவியேற்ற ரணில் தெரிவித்த முதல் கருத்தாக இருதேசங்களுக்கு இடமில்லை என்றதே அமைந்திருந்தது இந்த கருத்து கஜந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு எச்சரிக்கை செய்யும் முகமாகவே அமைந்துள்ளது

இலங்கைக்குள் வேறு தேசத்தை உருவாக்குவதற்கோ அல்லது அதற்காக முயற்சிக்கும் எந்தவொரு சக்திக்கும் இடமளிக்கப்போவதில்லை என சற்றுமுன்னர் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.


சத்தியப்பிரமாண கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் வாசிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு உறுதியளித்தார்.











« PREV
NEXT »

No comments