ஒர் கொடியில் பூத்த இரு முத்துக்கள்..!
இலங்கை தேசிய (u-19) உதைப்பந்தட்ட அணியில் யா/இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மாணவனான S.யூட்சுமன் இடம்பிடித்துள்ளார். இவரின் சகோதரனாக S,ஞானரூபன் தேசிய சீனியர் உதைபந்தாட்ட அணிக்குத் தெரிவுசெய்யப்பட்டு சர்வதேச போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
சர்வதேச பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்ட போட்டிக்கான அணியிலும், தேசிய அணியிலும் இடம் பெற்றதுடன் இந்த ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ள சர்வதேச உதைபந்தாட்ட போட்டியிலும் கலந்து கொள்ளவுள்ளார். இவர் கடந்த வருடம் நடை பெற்ற தேசிய ரீதியிலான பல போட்டிகளில் திறமையினை வெளிப்படுதியதைத் தொடர்ந்து அணியில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
குறிப்பாக 2014 ஆம் ஆண்டு நடை பெற்ற (ffsl-division-2) உதைபந்தாட சுற்றுப்போட்டியில் புனித ஹென்றியரசர் கல்லூரி இவர் தலைமையில் தேசிய ரீதியில் (champion) சாம்பியனாக ஆனதுடன் அணியின் வெற்றிக்கும் முக்கிய பங்காற்றியுள்ளார்.
அத்துடன் பாடசாலை மட்ட போட்டியில் கோட்ட, வலய, மாவட்ட, மாகாண ரீதியில் (champion) சாம்பியனாக ஆனதுடன் தேசிய ரீதியில் 2 ம் இடத்தினையும் பெறுவதற்கு முக்கிய பங்கு வகித்துள்ளார்.
இவை தவிர பல்வேறுபட்ட சுற்றுப் போட்டிகளில் தேசிய அளவில் சாம்பியனாக(champion ) ஆனதுடன் சிறந்த வீரராகவும் தெரிவு செய்யப்பட்டுளார். இவர் ஒரு சிறந்த முன்கள வீரராக (sriker) காணப்படுவதுடன் பின்கள (diffence) வீரராகவும் செயற்படுகின்றார். அத்துடன் யாழ்மாவட்ட மூத்த (senior) தெரிவு அணியிலும் இந்த ஆண்டு இடம் பிடித்திருந்தார்.
இவற்றிற்கு ஒரு படி மேலாக தேசிய உதைபந்தாட்ட அணியிலும் இடம் பிடித்து வல்வை மண்ணுக்கு பெருமை தேடித் தந்துள்ளார்.

No comments
Post a Comment