Latest News

July 09, 2015

பல்கலைக்கழகத்திற்கு இணையும் மாணவருக்கான பதிவுகள் மானியங்கள் ஆணைக்குழுவில் இடம்பெறும்!
by Unknown - 0

இம்முறை பல்கலைகழத்திற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான பதிவுகளை பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவில் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பல்கலைகழகங்களில் மாணவர்களை பதிவு செய்யும் போது , மாணவர்களுக்கான பாடத் தெரிவில் சிக்கல் ஏற்படுத்தப்படுவதோடு அவர்களுக்கு அசாதாரனம் இழைக்கப்படுவதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹன்த சில்வா தெரிவிக்கின்றார்.

இந்த விடயம் குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து கிடைத்துள்ள முறைப்பாடுகளை ஆராய்ந்து, அதனை தீர்ப்பதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய பல்கலைகழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான பதிவுகளை மேற்கொள்வதற்கு வழங்கப்படும் கால அவகாசம் சற்று நீடிக்கப்படும் எனவும் தலைவர் பேராசிரியர் மொஹன்த சில்வா தெரிவிக்கின்றார்.

மாணவர்களுக்கான பதிவுகள் நிறைவு பெற்றதை அடுத்து குறித்த பல்கலைகழகங்களுக்கான மாணவர்களின் பெயர்பட்டியல் அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
« PREV
NEXT »

No comments