இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும், நிபந்தனைகள் ஏதும் விதிக்கப்படவில்லை என்று அந்த முன்னணி கூறுகிறது.
ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஐ.ம.சுதந்திர முன்னணி சார்பில் முன்னாள் ஜனாதிபதிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தாலும், சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருந்தன என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இருந்தபோதும், மைத்திரிபால சிறிசேன அப்படி எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை என ஐ.ம.சு. முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேம்ஜயந்த இன்று கொழும்பில் தெரிவித்தார்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் மற்றும் இன்னாள் ஜனாதிபதிகள் ஒரே அணியில் இணைந்து செயல்படுவார்கள் எனவும் சுசில் பிரேம்ஜயந்த கூறினார்.
இதேவேளை அந்த நாடாளுமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குருநாகல் தேர்தல் மாவட்டத்திலிருந்து போட்டியிடுவார் என எதிர்கட்சித் தலைவரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் துணைத் தலைவருவான நிமால் சிறிபால டி சில்வா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
No comments
Post a Comment