இலங்கை தமிழர்களை பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபை தவறிவிட்டதாக மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் இடம்பெற்ற பொஸ்னிய இனப்படுகொலை தொடர்பான விவாதத்தின் போது, வீடியோ கொன்பரன்ஸ் மூலமாக அவர் இதனைக் கூறியுள்ளார்.
படுகொலைகளில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை ஒன்றுபட்டிருக்க வேண்டும்.
கடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் யுத்தத்தில் பலியான பொது மக்களை பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது.
தற்போது சூடான், புருண்டி மற்றும் மியன்மார் போன்ற நாடுகளிலும் இந்த நிலைமை காணப்படுகிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments
Post a Comment