Latest News

July 09, 2015

மேர்வின், துமிந்த, சஜின், சரணவுக்கு வேட்பு மனுக்கள் வழங்குவதில் சந்தேகம்!
by Unknown - 0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மேர்வின் சில்வா, துமிந்த சில்வா, சஜின் வாஸ் குணவர்தன மற்றும் சரண குணவர்தன ஆகியோருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் இம்முறை நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனுக்கள் வழங்கப்படுவதில் சந்தேகம் எழுந்துள்ளதாக கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதேவேளை, அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, அர்ஜ§ன ரணதுங்க மற்றும் எம்.கே.டி. எஸ் குணவர்தன ஆகியோர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடவுள்ளனர் என்றும் தெரியவருகின்றது. இந்நிலையில், ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் நாளை வெள்ளிக்கிழமையும் எதிர்வரும் திங்கட்கிழமையும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட 22 மாவட்டங்களிலும் ஐக்கிய தேசியக்கட்சி இம்முறை யானைச் சின்னத்தில் களமிறங்குகின்றது. 

இது இவ்வாறிருக்க ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவிருக்கின்றவர்கள் வேட்பு மனுக்களில் இன்று வியாழக்கிழமை கைச்சாத்திடவுள்ளனர். கொழும்பு, மஹாவலி கேந்திர நிலையத்தில் வைத்தே இன்றுகாலை 9 மணிமுதல் முன்னெடுக்கப்படவிருப்பதாக அறியமுடிகின்றது. இந்த தேர்தலில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ , ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடவிருப்பதாக தெரியவருகின்றது.
« PREV
NEXT »

No comments