Latest News

July 09, 2015

மகிந்த – மைத்திரி பொற்காலம் ஆகஸ்ட் 18க்கு பின்னர்!– விமல் வீரவன்ஸ
by Unknown - 0

மகிந்த –மைத்திரி பொற்காலத்தை எதிர்வரும் ஆகஸ்ட் 18ம் திகதிக்கு பின்னர் காண முடியும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

நாரஹேன்பிட்டி அபயராம விகாரையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த பெரிய குற்றங்களை செய்தவர்களுக்கு அந்த கட்சி தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்காவிட்டால், நாங்களும் எங்களில் சிறிய தவறுகளை செய்தவர்களுக்கு வாய்ப்புகளை வழங்க மாட்டோம் எனவும் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

வேட்புமனு கிடைக்காதவர்கள் யார் என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காத வீரவன்ஸ, அதனை எதிர்வரும் 13 ஆம் திகதி வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் அறிந்து கொள்ள முடியும் என்றார்.

தேர்தலில் வெல்ல ஐக்கிய தேசியக் கட்சி பொய்யான தகவல்களை வெளியிட்டு வருகிறது எனவும் வீரவன்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், பந்துல குணவர்தன, உதய கம்மன்பில, மனுஷ நாணயக்கார, வாசுதேவ நாணயக்கார ஆகியோரும் கலந்து கொண்டனர்.
« PREV
NEXT »

No comments