Latest News

July 07, 2015

வடக்கு-கிழக்கில் ஒரே நேரத்தில் கூட்டமைப்பு வேட்புமனுதாக்கல்!
by Unknown - 0

வடக்கு -கிழக்கின் 05 தேர்தல் மாவட்டங்களிலும் தமிழ்தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளது.    தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் நேற்று வவுனியாவில் நடைபெற்றது. இதன்போதே இந்த தீர்மானம்  எட்டப்பட்டுள்ளது.    

மேலும்  நேற்று முழுநாளும் இடம்பெற்ற கட்சி கூட்டத்தில் ஆசனப்பங்கீடு தொடர்பில் ஆராயப்பட்டது. அதன்போது ஆசனப்பங்கீடு தொடர்பில் இடம்பெற்று வந்த குழுப்பத்திற்கு நேற்று முடிவு கட்டப்பட்டு வேட்புமனுத்தாக்கலுக்கான திகதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.    அதன்படி வெள்ளிக்கிழமை 10 ஆம் திகதி  வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு-  கிழக்கின் 05 தேர்தல் மாவட்டங்களிலும்  ஒரேநேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது.  

யாழ்ப்பாணம்,  கிளிநொச்சியை உள்ளடக்கிய யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் வேட்பு மனுக்கையளிப்பு யாழ். மாவட்ட செயலகத்திலும் மன்னார் ,வவுனியா , முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னித் தேர்தல் தொகுதியில் வேட்புமனுக்கையளிப்பு வவுனியா மாவட்ட செயலகத்திலும் திருகோணமலை தேர்தல் மாவட்ட வேட்புமனுத்தாக்கல் திருகோணமலை மாவட்டச் செயலகத்திலும்  மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்திற்கான வேட்புமனு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திலும் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின் வேட்புமனு கையளிப்பு அம்பாறை மாவட்டச் செயலகத்திலும்  இடம்பெறவுள்ளது. 
« PREV
NEXT »

No comments