Latest News

July 07, 2015

ஜனாதிபதியின் நிலைப்பாட்டில் தெளிவில்லை! - த ஹிந்து
by Unknown - 0

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஊடாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புரிமை வழக்குவது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாடு தெளிவாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் த ஹிந்து நாளிதழ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இலங்கைப் பொதுத் தேர்தல் தொடர்பான விவரண கட்டுரையொன்றை வெளியிட்டுள்ள த ஹிந்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்பு மனு வழங்கவுள்ளதாக அறிவித்த பின்னர், ஜனாதிபதி அமைதியான போக்கை கடைபிடிப்பிடிப்பதாக குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் இடம்பெற்றதாக வெளியான தகவல்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுத்துள்ளதன் காரணமாக இந்த விடயம் தெளிவற்ற நிலைமையில் இருக்கின்றது.

எவ்வாறாயினும், அமைதியான போக்கை கடைப்பிடிப்பதன் ஊடாக மாத்திரம் முன்னாள் ஜனாதிபதிக்கு வேட்பு மனு வழங்கப்படுவதை ஜனாதிபதி அனுமதித்துள்ளார் என்ற ஒரு தீர்மானத்திற்கு வரமுடியாது எனவும் த ஹிந்து சுட்டிக்காட்டியுள்ளது.

« PREV
NEXT »

No comments