தமிழர்களின் நீதிக்கான வேட்கையில் ஒரு மில்லியன் கையெழுத்து இயக்கத்தின் வீச்சோடு அமெரிக்க தமிழர்களின் வருடாந்த விளையாட்டு விழா எழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் ஆண்டுதோறும் இடம்பெற்று வரும் இவ்விளையாட்டுப் போட்டியில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் பங்கெடுத்து நிகழ்வினை உற்சாகமூட்டினார்.
சிறுவர்கள் முதல் பெரியோர்களை, அனைவருக்குமான விளையாட்டுக்கள் இடம்பெற்றிருந்ததோடு, தமிழீழத் தாயகத்தினை நினைவிருத்தும் வகையில் தமிழர்களின் பாராம்பரிய விளையாட்டுக்களும் இடம்பெற்றிருந்தன.
சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயக்கம், உலகத் தமிழர்கள் அனைவராலும் எழுச்சியுடன் முன்னெடுக்கப்டு வருவதானது, உலகத் தமிழர்களின் ஒருங்கிணைவுக்கும் எடுத்துக்காட்டாக அமைவதோடு ஈழத்தமிழர்களின் நீதிக்கான போராட்டத்திற்கு உற்சாகம் ஊட்டுவதாக அமைகின்றதென பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தனதுரையில் தெரிவித்திருந்தார்.
அரச இலச்சினை பொறிக்கப்பட்ட வெற்றிக் கேடயங்களும், மடல்களும் களமாடிகளுக்கு வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடதக்கது.
No comments
Post a Comment