முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ, எதிர்வரும் பொதுத்தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிதிமோசடி குற்றச்சாட்டுகள் காரணமாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படமாட்டது என தெரிவிக்கப்படும் அதேவேளை அவருக்கு தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்ற ஆசனம் வழங்க கடந்த வெள்ளிக்கிழமை இரவு சுசில் பிரமேஜயந்தவின் வீட்டில் இடம்பெற்ற இரகசிய கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
இதன் காரணமாக கம்பஹா மாவட்டத்தில் கோட்டபாய ராஜபக்ஷ போட்டியிடுவார் என தெரிவிக்கப்படுகிறது.
என்றாலும் வேட்பாளர்கள் தொடர்பில் இறுதி முடிவுகள் இதுவரை எடுக்கப்படவில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுசில் பிரமேஜயந்த அறிவித்துள்ளார்.
No comments
Post a Comment