ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் இடையில் கொழும்பில் இன்று சந்திப்பொன்று நடைபெற்றுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சந்திப்பில் வேறு எவரும் கலந்து கொள்ளவில்லை. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்பட்டமை பற்றி இவர்கள் பேசியிருக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.
அதேவேளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் பிறந்த தினத்தை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று மாலை வைபவம் ஒன்று நடைபெறவுள்ளது.
இதில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு முன்னாள் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒழுங்கு செய்திருந்த விருந்திலும் ஜனாதிபதி கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment