Latest News

July 05, 2015

யாழ் பல்கலைக் கழகத்தில் கரும்புலிகள் நாள்!!
by admin - 0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களினால் கரும்புலிகள் நாள் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.இன்று கரும்புலிகள் நாள். மண்ணும் மக்களும் மறக்க முடியாத மாவீரன் கப்டன் மில்லரோடு கரும்புலிகளின் வீரவரலாறு ஆரம்பமான நாள்.

ஆம். இனத்தின் விடிவிற்காக கரும்புலிகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5ம் நாள் கடைப்பிடிக்கப்படும் நினைவு நாளே கரும்புலிகள் நாள் எனப்படுகிறது.

ஈழ மக்களின் தலை நிமிர் வாழ்விற்காக தம் உடலையே ஆஃதி ஆக்கி பஞ்சப்பூதங்களோடு ஒன்றாக இணைந்த முத்தான மகத்தான எங்கள் வீரர்களை வணங்கும் வீர நாள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொலைப் போராளியான மில்லர் தற்கொலைத் தாக்குதலை நடத்திய நாளையே தமிழீழத் தேசியத் தலைவர் கரும்புலி நாளாக பிரகடனப்படுத்தியிருந்தார்.
விடுதலைப்புலிகளின் முதல் தற்கொலைத் தாக்குதல் 1987 யூலை மாதம் 5ம் திகதி இலங்கை இராணுவத்திற்கு எதிராக மில்லரினால் நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த இராணுவ முகாமின் மீது நடத்தப்பட்டது.

அன்று தான் உலகம் தமிழனின் வீரத்தை கண்டு திகைத்தது. தன் இனத்திற்காக எதையும் செய்யும் தமிழ் இளைஞர்களின் தியாகத்தை கண்டு அஞ்சியது சிங்களம். போரியல் மரபில் புது யுத்தியை கையாண்டு எதிரிக்கு பாடம் புகட்டினார் மில்லர்.

கரும்புலிகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகள் பலவற்றில் ஈகச் சுடர் ஏற்றப்பட்டு கரும்புலி மாவீர்களுக்கு மலர் வணக்கம் செய்யப்படுகிறது.

இதன் பொருட்டு இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் 28வது கரும்புலிகள் நாள் மாணவர்களால் அனுஷ்டிக்கப்பட்டது
« PREV
NEXT »

No comments