Latest News

July 06, 2015

தமிழினப் படுகொலைக்கு நீதிகோரும் கையெழுத்து இயக்கத்தில் பிரபல நட்சத்திரங்கள் கையொப்பம்
by admin - 0


சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயக்கத்தில் புலம்பெயர் ஈழத்து நட்சத்திரங்கள் மற்றும் தமிழக பிரபலங்கள் பலர் உற்சாகத்துடன் கையெழுத்து இட்டு வருகின்றனர்.

புலம்பெயர் ஈழத்து நட்சத்திரமான பிரபல பாடகி ஜெசீக்கா தனது லண்டன் பயணத்தின் போது இக்கையெழுத்து இயக்கத்தில் ஒப்பமிட்டுக் கொண்டுள்ளார்.

இதேவேளை தமிழக நட்சத்திரங்களான பிரபல இசையமைப்பாளர் டி.இமான், பாடகர் திவாகர், பிரபல ஒவியர் மருது,பேராசியர் அ.மார்க்ஸ் என பல பிரபலங்கள் ஆர்வத்துடன் ஒப்பமிட்டுள்ளனர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் தமிழீழம், புலம், தமிழகம் என தமிழர்கள் பரந்து வாழ்கின்ற தேசங்களெங்கும் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும், பல்வேறு அமைப்புக்களினாலும் தனிநபர்களினாலும் இக்கையெழுத்து இயக்கம் எழுச்சியுடன் முன் நகர்ந்து வருகின்றது. 

பத்து இலட்சம் கையெழுத்துக்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்டு வரும் கையெழுத்து இயகத்தின் செயற்பாடு www.tgte-icc.org எனும் இணைய மூலமாகவும் நேரடியாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா.மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் விசாரணை அறிக்கையின் பரிந்துரையில் காத்திரமாக தாக்கத்தை ஏற்படுத்தும் முகமாக சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துமாறு இக்கையெழுத்து இயக்கம் ஐ.நாவைக் கோருகின்றது.



« PREV
NEXT »

No comments