Latest News

July 11, 2015

நடிகர் சிலம்பரசன் மற்றும் இசையமைப்பாளர் பிரகஸ்குமார் கையெழுத்துப் போராட்டத்திற்குஆதரவு
by admin - 0

தமிழக பிரபல நடிகர்  சிம்பு அவர்களும் தமிழக இசையமைப்பாளர் பிரகஸ்குமார் அவர்களும் இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த ஐநா சபையைக் கோரும் கையெழுத்து போராட்டத்தில் தங்களையும் இணைத்து தங்களுடைய ரசிகர்களும் கையெழுத்து இடுங்கள் என்ற வேண்டுகோளையும் சமூக வளைதரதளமான டுவிற்றரில் பதிவு செய்துள்ளனர். நடிகரும் இலட்சிய தி.மு.க தலைவருமான ரஜேந்திரரின் மகனுமான லிட்டில் சுப்பஸ்டாருமான சிம்பு தனது பதிவில் இன்னும் குறுகிய காலமே இருப்பதால் விரைந்து செயல்படுங்கள் என்று கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் பிரகஸ்குமார் தனது பதிவில்

தமிழர்களை இனவழிப்பு செய்த சிறீலங்கா அரசாங்கத்தை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு இதுவரை கையெழுத்து இடவில்லையாயின்.. தயவுசெய்து உடனடியாக கையெழுத்து இடுங்கள்.. -திரு.ஜி.வி.பிரகஸ்குமார் (தமிழக இசையமைப்பாளர்)

என்று பதவிட்டுள்ளார். 
தமிழக செயல்வீரர்கள், அரசியல் கட்சிகள்  மற்றும் சினிமா நட்சத்திரங்களின் மிகப்பெரும் ஆதரவுடன் ஶ்ரீலங்கா அரசுக்கு எதிரான கையெழுத்து போராட்டம் எதிரிகளின் மற்றும் தமிழின விரோதிகளின் பொய் பரபரபுரைகளையும் உடைத்தெறிந்து வெற்றியுடன் தனது இலக்கை நோக்கி பயணிக்கிறது 

நீங்கள் கையொப்பம் இடுவதற்கு

வாக்களிப்பதற்கு செய்யவேண்டியது...
கீழுள்ள முகவரியை அழுத்தவும்...
http://www.tgte-icc.org/
அல்லது
http://www.tgte-icc.org/tamil.asp
காணொளி விளக்கம்
http://youtu.be/CKjb_NlHQ70


நேற்றைய தினம் நாம் தமிழர் கட்சியினரால் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது 













« PREV
NEXT »

No comments