முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பில் வேட்புமனு வழங்கப்பட்ட பின்னர் அதிருப்தியடைந்த ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு ஆதரவு வழங்கிய தரப்புக்கள், கூட்டமைப்பில் இருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய முடிவெடுத்துள்ளனர்.
அமைச்சர் ராஜித சேனாரத்ன, பாட்டலி சம்பிக்க ரணவக்க, ரத்தன தேரர் , அர்ஜூன ரணதுங்க உட்பட சுமார் 20 பேர் இணைவது உறுதி என அமைச்சர் ராஜித்த சேனாரத்ன சிங்கள ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
எதற்காக ஐ.தே.கவில் இணைய வேண்டும் புதிய கூட்டணி கட்சி ஒன்றை அமைக்க முடியுமே என ஊடகவியலாளர் கேட்டதற்கு,
இருக்கும் சில தினங்களில் கட்சி ஒன்றை உருவாக்கி போட்டி இடுவது சுலபமில்லை, அதே வேளை ஐக்கிய தேசியக் கட்சி இதுவரை நல்லாட்சியை சரியான முறையில் கொண்டு செல்கிறது. துரோகிகளை ஒழிக்க ஐ.தே.க வுடன் கை கோர்ப்பதே சரிவான திட்டம் என அவர் மேலும் தெரிவித்தார்.
No comments
Post a Comment