Latest News

July 05, 2015

கோகுல்ராஜ் படுகொலைக்கு நீதி கேட்டும், சாதி வெறி கொலைகளைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம்
by admin - 0

கோகுல்ராஜ் படுகொலைக்கு நீதி கேட்டும், சாதி வெறி கொலைகளைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் ஜூலை 04 அன்று மே பதினேழு இயக்கத்தினால் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்டது. 

இதில் பல்வேறு தோழமை கட்சிகள், இயக்கங்களை சேர்ந்த தோழர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு முசுலீம் முன்னேற்றக் கழகத் தோழர் அப்துல் சமது, விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சியின் தோழர் குடந்தை அரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர் பகலவன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தோழர் மல்லை சத்யா, தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர் குமரன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர் உமாபதி, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் தோழர் பொழிலன், தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் தோழர் அருணபாரதி, வழக்கறிஞர் தோழர் அங்கையற்கண்ணி, தமிழர் விடுதலைக் கழகத்தின் தோழர் சுந்தரமூர்த்தி, தமிழர் விடியல் கட்சியின் தோழர் டைசன், தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் தோழர் சின்னப்பத்தமிழர், புரட்சி தமிழகம் தோழர் ஏர்போர்ட் மூர்த்தி, SC-ST மக்கள் கூட்டியக்கத்தின் தோழர் ரேவதி நாகராசன், பாலச்சந்திரன் மாணவர் இயக்கத்தின் தோழர் நந்தகுமார், மே பதினேழு இயக்கத்தின் தோழர்

அருள்முருகன் மற்றும் திருமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்

























« PREV
NEXT »

No comments