Latest News

July 09, 2015

அழிவின் விளிம்பில் உலகின் நான்காவது மிகச்சிறிய நாடு - நாட்டைக் காக்குமாறு பிரதமர் வேண்டுகோள்
by Unknown - 0

புவி வெப்பமயமாதலினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள, உலகின் நான்காவது மிகச்சிறிய நாடான துவாலு அழிவின் விளிம்பில் உள்ளது.

அதனைக் காக்குமாறு அந்நாட்டுப் பிரதமர் தனது உருக்கமான வேண்டுகோளை உலக நாடுகளிடம் விடுத்துள்ளார்.

பாரிஸில் டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா. பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டிற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்களை ஒன்றிணைக்கும் நோக்கத்திலான பயணத்தை துவாலுவின் பிரதமர் எனிலே ஸ்போகா மேற்கொண்டுள்ளார்.

பசுபிக் பெருங்கடலில் அவுஸ்திரேலியா மற்றும் ஹவாலிக்கு நடுவே குட்டித் தீவுகளைக் கொண்ட நாடு தான் துவாலு.

வெறும் 10,000 பேருக்கான தேசமாக உள்ள துவாலு, பருவ நிலை மாற்றத்தால் உடனடியாகப் பாதிக்கப்படும் நாடாகப் பதிவாகியுள்ளது.

புவி வெப்பமயமாதலை 2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைக்க வேண்டும் என்ற இலக்கை, விஞ்ஞானிகளின் அறிவுறுத்தலின்படி 1.5 டிகிரி செல்சியஸாக மேலும் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட வேண்டும் எனவும் அதற்கு ஐரோப்பியத் தலைவர்கள் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் துவாலு நாட்டின் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
« PREV
NEXT »

No comments