Latest News

July 09, 2015

போராளி மாவீரர் குடும்பங்களுக்கு உதவித்திட்டம் -பா-டெனீஸ்வரன்
by admin - 0

புனர்வாழ்வு பெற்ற போராளிகள், உயிர் நீத்த போராளிகளின் குடும்பங்கள். அரசியல் கைதிகளின் குடும்பங்கள் என்ற அடிப்படையிலான வாழ்வாதார உதவித் திட்டமொன்று மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தினால்; ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இந் நிலையில் இதற்கு புலம் பெயர் சமூகங்களும் தம்மாலான உதவிகளை வழங்குவது காலத்தின் தேவையாக உள்ளதாகவும் வடக்கு மாகாண மீன்பிடி மற்றும் கிராமிய, வர்தக வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தில் இரு கரங்களையும் இழந்திருந்த நபரொருவர் தமது பிரச்சனைகள் தொடர்பிலும் வாழ்வாதார உதவிகளை வழங்குமாறும் கிராமிய வர்த்தக வாணிப அமைச்சரைச் சந்தித்துக் கலந்தரையாடியிருந்தார். இதன் போது அவருக்கான உதவியை வழங்க முன்வந்துள்ள அமைச்சர் மேலும் தெரிவித்திருப்பதாவது..

கடந்த காலத்தில் யுத்தத்தின் வடுக்கள் இன்னமும் இங்கு இருந்த கொண்மேட தான் இருக்கின்றது. இந்நிலையில் இத்தகைய பாதிப்புக்களிலிருந்த எமது மக்களை மீட்டெடுக்க வேண்டும். இதற்குருpய நடவடிக்கைகளை அனைவரும் இணைந்து மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இதற்கமைய எமது அமைச்சினூடாக அவர்களுடைய வாழ்வாதார்த்தை மேம்படுத்தும் உதவித் திட்டமொன்றை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. .  

குறிப்பாக கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் திரட்டப்பட்ட புனர்வாழ்வு பெற்ற போராளிகள், அரசியல் கைதிகள், யுத்தத்தில் உயிர் நீத்த போராளிகளின் குடும்பங்கள் என்ற அடிப்படையிலான வாழ்வாதார உதவித்த்திட்டம் எதிர்வரும் மாதத்தில் ஆரம்பிக்க உள்ள நிலையில்,

இதே போன்ற பல்லாயிரக்கணக்கான யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அன்றாட பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய முடியாத நிலையில் இருக்கும் நமது நாட்டிற்கு, புலம்பெயர் சமூகங்கள் தமது உதவிகளை வழங்குவது காலத்தின் தேவையாக உள்ளது. எனவே இதனை உணர்ந்து அனைவரும் உதவிகளை வழங்க முன்வர வேண்டுமென்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
« PREV
NEXT »

No comments