Latest News

July 09, 2015

தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் சதி -மாவை
by admin - 0

வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிப்பதற்கு பல்வேறு ஊடுருவல் நடவடிக்கைகள் திட்டமிட்ட வகையில் மேற்டிகொள்ளப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டியிருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கடந்த காலத் தேர்தல்கள் போன்று இத் தேர்தலிலும் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கெ தமது ஆணையை வழங்க  வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

யாழ். மார்ட்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் ஊடகவியியலாளர்களைச் சந்தித்து கருத்து வெளியிடுகையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலானது தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகின்றது. எனவே இத் தேர்தலினூடாக் தமிழ் மக்களின் பலத்தை மீண்டும்                                                 சர்வதேசத்திற்கு எடுத்துக் காட்டும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மக்கள் தமது ஆணையை வழங்க வேண்டும்.

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வேண்டும். தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சனைகள் முதல் அடிப்படைப் பிரச்சனைகள் மற்றும் காணாமல் போனவர்கள். பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும். அத்தோடு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள், ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் என்பன விடுவிக்கப்பட வேண்டும்.

இத்தகைய பிரச்சனைகள் திரு;க்கப்படாது காலங்ம் காலமாக ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்கள் ஏமாற்றியெ வருகின்றன. இந்நிலையில் கடந்த ஐனவரி வாதாம் இடம்பெற்ற ஐனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சியமைத்த அரசாங்கம் சில வற்றைச் செய்திருந்த போதும் பலதைச் செய்யாத நிலையே இரக்கின்றது.

இவ்வாறான நிலையிலும் சர்வதேச சமூகம் தற்போது எமக்கு ஆதரவாக இருந்து எமது பிரச்சனைகளைத் தீர்ப்பதில் அக்கறை கொண்டு செயற்பட்டு வருகின்றதனை நேரடியாகவே அவதானிக்கக் கூடியதாக அமைகின்றது.

குறிப்பாக தமிழ் மக்களுடைய இனப்பிரச்சனைக்குத்; தீர்வினை வழங்க வேண்டுமென்பதில் இந்திய அரசாங்கம் இலங்கை அரசிற்கு தொடர்ச்சியாக அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றது. இத்தகைய விடயங்கள் தொடர்பில் இந்திய அரசு எம்முடன் பேசியும் இருக்கின்றது.

ஆகவே தமிழ் மக்களின் ஆணையைப் பெற்ற கட்சியாக இருக்கின்ற தமிழத் தேசியக் கூட்டமைப்பிற்கே தமிழ் மக்கள் மீண்டும் தமது ஆணையை வழங்க வேண்டும். இதனூடாகவே பேரம் பேசுகின்ற சக்தியாக தொடர்ந்தும் செயற்பட்டு எம்முடைய பிரச்சனைகளுக்கு தீர்வை ஏற்படுத்திக் கொள்ள முடியுமென்றார்.

இந் நிலையில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலானது தமிழ் மக்களிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகக் கருதப்படுகின்றது. இத் தேர்தலில் தமிழ் மக்களின் பலமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மீண்டும் மீண்டும் வெற்றி பெறச் செய்ய வேண்டிய பொறுப்பு மக்களிற்கு இருக்கின்றது.

இதே வேளையில் மக்களைக் குழப்பி வாக்குகளைச் சிதறிக்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றது. 
எனவே இதனை மக்கள் சரிவரப் பயன்படுத்திக் கொண்டு சரியானவர்களைத் தெரிவு செய்ய வேண்டும் என அவர் மேலும் கேட்டுக் கொண்டார். 
« PREV
NEXT »

No comments