விக்ரமை வைத்து அந்நியன் மற்றும் ஐ என இரண்டு மெகாஹிட் படங்களைக் கொடுத்திருக்கும் ஷங்கர், விக்ரமின் மகன் துருவ்வை நாயகனாக்கவுள்ளார்.
ஷங்கரின் இயக்கத்தில் துருவின் அறிமுகம் கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
ஷங்கரின் இயக்கத்தில் எந்திரன் 2 இல் ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார் விக்ரம்.
ரஜினிக்கு வில்லனாக அமீர்கானை மனதில் வைத்துத்தான் இந்தக் கதையை எழுதினாராம் ஷங்கர்.
அமீர்கான் நடிக்க மறுத்ததால் தற்போது விக்ரமுக்கு ஏற்றவாறு கதையை மாற்றி அமைக்க இருக்கும் ஷங்கர், 2016 ஆம் ஆண்டு படப்பிடிப்பை ஆரம்பிக்கவுள்ளார்.
எந்திரன் 2 முடிந்தவுடன் அநேகமாக துருவ்வை வைத்து அவர் இயக்கலாம் என்கிறார்கள்.
ஷங்கரின் இயக்கத்தில் துருவ் நடித்தால் அவரின் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறாராம் விக்ரம்.
No comments
Post a Comment