மாத்தளை கொட்டகொட பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் குடும்பம் ஒன்று நேற்று மாத்தளை நகருக்கு பொருட்களை கொள்வனவு செய்ய முச்சக்கர வண்டியில் வந்த போது மாத்தளை பழைய போலிஸ் நிலைய கட்டிடத்தில் இயங்கி வரும் போலிஸ் பிரிவை சேர்ந்த சில காவல் துறையினர் குறித்த குடும்பத்தினர் சென்ற முச்சக்கரவண்டியை நிறுத்தி பின் கண்ணாடியில் ஒட்டப்பட்டிருந்த “லா இலாஹ இல்லால்லாஹ் ” என்ற ஸ்டிக்கரை பலாத்காரமாக அகற்றி உள்ளனர்.
அத்துடன் அங்கு சிவில் உடையில் இருந்த உத்தியோகத்தர் ‘இது அராபிய நாடு அல்ல இங்கு இது போல் செய்ய முடியாது என கடும் தொனியில் திட்டி உள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக தம்புள்ள பள்ளிவாயலுக்கு குரல் கொடுத்து வரும் அல்ஹாஜ் சலீம் அவர்கள் சம்பந்தபட்ட தரப்பை அழைத்துக்கொண்டு இன்று மாலை மாத்தளை மாவட்ட சிரேஷ்ட போலிஸ் உத்தியோகத்தர் (SSP) அஜந்த சமரகோன் அவர்களிடம் முறைபாடு செய்து இதற்கு தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளார்.
பொலிஸாரின் இந்த நடவடிக்கை இனவாத நடவடிக்கையாகும் என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
விவசாயி செய்திக்காக ரியாஸ்
No comments
Post a Comment