Latest News

July 08, 2015

தமிழ்மக்களிடையே பிரிந்து போவதற்கான விருப்பத்தினை தெரிவிப்பதற்கான பொதுவாக்கெடுப்பு அமெரிக்காவிடம் கோரிக்கை
by admin - 0

இலங்கையில் நடைபெற்ற போற்குற்றங்கள் பற்றிய விசாரணைகளை இலங்கை அரசாங்கமே நடத்துவது என்பதற்கு ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

தங்களை தானே விசாரணை செய்வது முறையானது அல்ல. இலங்கையில் பலதடவை உள்ளக விசாரணை குழுக்கள் அமைத்து விசாரணை நடைபெற்றும் இன்றுவரை எதுமே சரியாக நடத்தப்படவில்லை. 

மூன்றாம் தரப்பான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அமைப்பினால் மேற்கொள்ளபடும் விசாரணைகளே சரியாக நடைபெறும் என்று நம்பிக்கை எமக்குள்ளது.

 இதற்கு அமெரிக்கா ஜனாதிபதி அவர்களும் ஆதரவினை வழங்குவார் என ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு நம்புவதாக ஒபாமாவுக்கு ஜூன் 23, 2015ல் எழுதிய கடிதத்தில் குறிபிட்டுளார்கள் .

அமெரிக்கா ஜனாதிபதி அவர்கள் பொறுப்பில் இருக்கும் போதே இலங்கையில் இந்த பாரிய இனவழிப்பு (2009) நடைபெற்றுள்ளது. எனவே அமெரிக்கா ஜனாதிபதி அவர்களும் அவரது அதிகாரிகளும் எமக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கும் கடப்பாடு உடையவர்கள். 

எனவே அர்ப்பணிப்புடன் இனவழிப்புக்கான சரியான நீதியை பெற்றுக்கொடுப்பீர்கள் என்று ஒபாமாவுக்கான தமிழர் எழுதியுள்ளார்கள் .

எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி பெற்றுக்கொடுப்பதோடு எமது மக்களுக்கான நிரந்தரமான அரசியல் தீர்வினைப் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்பெற்றுக்கொடுப்பதற்கு அமெரிக்கா ஜனாதிபதி அவர்கள் முயற்சிப்பார் என்று நம்புகின்றோம் எனவும்


தமிழ் மக்களுக்கு நிரந்தமானதும் அமைதியானதுமான தீர்வானது சூடானில் இருந்து தென் சூடான் பிரிந்து சென்றது போன்ற ஒரு தீர்வே சரியானது ஆகும். 

எனவே வடகிழக்கு வாழ் தமிழ்மக்களிடையே பிரிந்து போவதற்கான விருப்பத்தினை தெரிவிப்பதற்கான பொதுவாக்கெடுப்பு ஒன்றினை மேற்கொள்ள அமெரிக்கா ஜனாதிபதி அவர்கள் ஒழுங்கு செய்து தரவேண்டும் என்று ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு விரும்புகின்றது என இறுதியில் குறிபிட்டுளார்கள்.

- ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு 



« PREV
NEXT »

No comments