ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றியீட்டினால், கூட்டமைப்பின் தலைமைப் பதவியிலிருந்து அவரை நீக்கிவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்டணியின் முக்கிய பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ஜனநாயக இடதுசாரி கட்சியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார இதனை உறுதி செய்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மை உறுப்பினர்கள், கூட்டமைப்பின் தலைவர் பதவியிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீக்குவது என தீர்மானித்துள்ளனர்.
இதன்படி, கூட்டமைப்பின் புதிய தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தேர்தலின் பின்னர் நியமிக்கப்படுவார் என தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலத்தில் இந்த பதவி மாற்றத்தை மேற்கொள்ள கால அவகாசம் இல்லாத காரணத்தினால் தேர்தலின் பின்னர் கூட்டமைப்பின் தலைமைப் பதவியிலிருந்து மைத்திரி நீக்கப்பட உள்ளார்.
No comments
Post a Comment