சிறிலங்காவின் பாராளுமன்றத் தேர்தல் விவகாரத்தில் புலம்பெயர் தமிழர்களின் நிலைப்பாடு குறித்து விவாதிப்பதற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கூடுகிறது.
இலங்கைத்தீவினை மையப்படுத்திய அனைவரது பார்வையும் சிறிலங்காவின் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் கூர்மை பெற்றுள்ள நிலையில், இத்தேர்தல் தொடர்பில் புலம்பெயர் தமிழர்கள் எவ்வாறான நிலைபாட்டினை கொண்டுள்ளார்கள் என்பது பற்றிய எதிர்பார்பு பல்வேறு மட்டங்களில் எழுந்துள்ளது.
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பில் விவாதிப்பதற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் சிறப்புக் கூட்டமொன்று சனிக்கிழமை(18/07/2015) இடம்பெறுவதாக நா.அரசாங்கத்தின் அரசவைச் செயலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாராப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் மில்லியன் கையெழுத்து இயக்கத்தின் இரண்டாம் கட்டம் செப்ரெம்பர் வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழீழத் தாயகத்தில் இருந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொடர்ந்தும் ஒப்பமிட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.
நாதம் ஊடகசேவை

No comments
Post a Comment