எனது அரசியல் அறிவு ஒரு தவழும் குழந்தைக்கு சமமானது. ஆரம்பத்திலேயே மன்னிப்பு கேட்டு , எனது கருத்தை பகிர்கிறேன்.
வருகின்ற தேர்தலை சரியாக பயன் படுத்த வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது. அதைவிட மக்களை சரியான பாதையில் வழி நடத்த வேண்டிய தார்மீக பொறுப்பு எங்கள் அரசியல் தலைவர்களுக்கு (socalled) உள்ளது. வெறுமனே உணர்ச்சி மயமான வாதங்களையும் வாக்குறுதிகளையும் விடுத்துஆக்க பூர்வமான சிந்தனைகளையும் திட்டங்களையும் முன்னிறுத்துவோம். A9 வீதியை விட்டு தொலை தூரத்தில் இன்னும் போர் வடுக்களை தாங்கி நிற்கும் கிராமங்களையும் மக்களையும் ஒரு கணம் எண்ணி பார்ப்போம். சொத்து இழந்து, சுகம் இழந்து, அங்கம் இழந்து , உறவுகள் இழந்து இன்னும் ஒரு நேர சாப்பாட்டுக்கு அல்லாடும் மக்களை நினைத்து ஆவது சுயநலம் விடுத்தது ஆரோகியமான அரசியல் நடத்துவோம். மாற்று கட்சிகளையும் மற்றவர்களையும் தூஷிப்பதை விட்டு விட்டு நாங்கள் ஒவ்வொருவரும் என்ன செய்யலாம் (தனியாகவோ or கட்சியாகவோ) என்று சிந்திப்போம்.
என்னுடன் வேலை செய்த ஒரு வெளி நாட்டவரின் கருத்தை இங்கு பகிர்வது மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என நினைக்கிறன். போர் முடிந்து வந்த முதலாவது தேர்தலில் தமிழ் மக்கள் தங்கள் அமோக வாக்கினை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கியிருந்தார்கள். ஆனால் தொடர்ந்து வரும் தேர்தலில்களில் இந்த ஆதரவு குறைவடைந்து செல்லும் என்றும் மக்கள் ஒரு மாற்றத்தினை நோக்கி தங்கள் வாக்குகளை பிரயோகிப்பார்கள் என்றும் அவர் எதிர்வு கூறியிருந்தார்.
அத்துடன், Northern Provicial Council பதவி ஏற்று இத்தனை வருடங்களில் ஒரு 'comprehensive development plan' செய்ததாக நான் கேள்விப்படவில்லை. இதற்கு ஒரு சின்ன உதாரணம் யாழ்ப்பணத்தில ' இங்க குப்பை போட வேணாம் ' என்னும் வாசகம் பிரபல்யம். ஆனால் இங்கே குப்பைகளை போடவும்' என்று பிரச்சனைக்கு தீர்வு சொல்லும் வாசகம் எங்குமே இல்லை. இந்த சுபாவம் தான் அநேகமான தலைவர்களிடம் காண கூடியதாக உள்ளது.
எனவே யாரை எங்கள் பிரதிநிதியாக பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் என்பதை சரியாக சிந்தித்து முடிவெடுப்போம்.
சங்கீதா மகிந்தன்

No comments
Post a Comment