Latest News

July 20, 2015

எஞ்சலோ மெத்தியூஸ் வருத்தம்!
by Unknown - 0

பாகிஸ்தான் அணியுடனான சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்ற இலங்கை கிரிக்கெட் அணி முழு வீச்சில் முயற்சிக்கும் என்று அணி தலைவர் எஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்துள்ளார்.

நேற்றைய போட்டியில் தோல்வியடைந்தமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

நேற்றைய போட்டியை பொறுத்தவரையில் பாகிஸ்தான் அணி சகல துறைகளிலும் மிக சிறப்பாக செயற்பட்டது.

மறுபுறத்தே இலங்கை அணி அனைத்து துறைகளிலும் மிகவும் மோசமாகவே செயற்பட்டமையை மெத்தியூஸ் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இதன்பொருட்டு தாம் மிகவும் வருத்தமடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் மீதமாக உள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்ற தமது அணி முயற்சிக்கும் எனவும் எஞ்சலோ மெத்தியூஸ் குறிப்பிட்டுள்ளார்.
« PREV
NEXT »

No comments