Latest News

July 20, 2015

ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் இலங்கையர்!
by Unknown - 0

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்திருந்தாகக் கூறப்படும் இலங்கையர் ஒருவர் தொடர்பான தகவல்கள் முதன்முறையாக வெளிவந்துள்ளன.

கண்டி, கலேவல பிரதேசத்தைச் சேர்ந்த அபு சுராயா சயிலானி என்ற 37 வயதான நபரே ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்து சிரிய அரசுக்கு எதிராக போராடியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவர் அமெரிக்காவின் வான் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை சாட்சியொருவரும் உறுதிசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ரது.

குறித்த நபர் திருமணமானவர் எனவும் அவருக்கு 6 குழந்தைகள் இருப்பதாகவும் , மேலும் அவரது மனைவி கர்ப்பமாக உள்ளதாகவும் அவரது உறவினரொருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த நபர் தற்காப்பு கலையில் தேர்ச்சி பெற்றவரென அவரது உறவினர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி. பட்டத்தைப் பெற்றவர் என்பதுடன் அராபி, உருது , சிங்களம் ,தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் சரளமாக உரையாடக்கூடியவரெனவும் அவரது உறவினர் தனது பேஸ்புக் கணக்கில் தெரிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments