Latest News

July 20, 2015

நல்லாட்சி அரசாங்கம் இன்னும் நீடித்திருந்தால் எலும்பு கூடுகள் மட்டுமே மிஞ்சும்-மஹிந்த
by Unknown - 0

நல்லாட்சி அரசாங்கம் இன்னும் நீடித்திருந்தால் இந்த நாட்டில் எலும்பு கூடுகள் மட்டுமே மிஞ்சியிருக்கும்  என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 

பத்தரமுல்ல, தலங்கமையில் அமைந்துள்ள சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் அகில இலங்கை விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவி அதிகாரிகள் சங்கத்தின் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை(20) இடம்பெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

”என்னுடைய நிர்வாகத்தை பிடுங்கி எடுத்த ஏழு மாதங்களுக்குள் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்துவிட்டது. மக்கள் வாழமுடியாத அளவுக்கு நிலைமை மாற்றியமைக்கப்பட்டு விட்டது. அவ்வாறான ஆட்சி நீடித்திருந்தால் நாட்டில் எலும்பு கூடுகள் மட்டுமே மிஞ்சியிருக்கும்” என்றார்
« PREV
NEXT »

No comments