Latest News

July 07, 2015

சொந்த மண்ணில் மண்ணைக் கௌவ்விய இலங்கை!
by Unknown - 0

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்சில் 278 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், பாக்கிஸ்தான் அணி தமது முதலாவது இன்னிங்சிற்காக 215 ஓட்டங்களைப் பெற்றது.

தமது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணி 313 ஓட்டங்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து 377 என்ற வெற்றி இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி துடுப்பெடுத்தாடியது. 

போட்டியின் 5 ஆவது நாளான இன்று வெற்றியை சுவைக்க அவ் அணிக்கு 8 விக்கெட்டுக்கள் கைவசமிருக்க வெறும் 147 ஓட்டங்களே தேவைப்பட்டது.

இந்நிலையில் , யூனிஸ்கானின் உறுதியான ஆட்டத்தின் உதவியுடன் அவ்வணி  7 விக்கெட்டுக்கள் மீதமிருக்க போட்டியை வென்று தொடரையும் 2-1 என்ற கணக்கில் தன்வசமாக்கியது.

யூனிஸ்கான் ஆட்டமிழக்காமல் 171 ஓட்டங்களைப் பெற்றதுடன் போட்டியின் நாயகனாவும் தெரிவானார். ஷான் மஷூட் 125ஓட்டங்களைப் பெற்றார்.  இத் தொடரின் நாயகனாக யாசிர் ஷா தெரிவானார்.

9 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடர் வெற்றி இதுவாகும்.  மேலும் இலங்கை அணிக்கெதிராகப் பெற்ற தொடர் வெற்றியுடன் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் தரப்படுத்தலில் மூன்றாம் இடத்துக்கு பாகிஸ்தான் முன்னேறியுள்ளதுடன், இலங்கை ஏழாம் இடத்துக்கு வீழ்ந்துள்ளது.

« PREV
NEXT »

No comments