Latest News

July 14, 2015

அனந்தி, சிவாஜிலிங்கம் தொடர்பாக போலி பிரச்சாரம்
by admin - 0

தமிழ் தேசியத்திற்கு தொடர்ந்து குரல் கொடுத்துவரும் ஏம். கே சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் போன்றோர் மீது அரச சார்பு ஊடகங்கள் தொடர்த்து போலி குற்றசாட்டுகளை சுமந்திவருகின்றது என தமிழ் தேசிய உணவளர்கள் விசனம் தெரிவித்துள்ளர்.
 
தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்களின் சார்பு ஊடகங்கள் மற்றும் அரசசார்பு ஊடகங்கள் இவ்வாற போலி குற்றசாட்டுக்களை  சுமந்தி வருவதுடன் தமக்கு தேவையானவர்களின் தமிழ்விரோத செயற்பாடுகளை மூடிமறைக்கும் அல்லது அதனை நியாயம் கற்பிக்கும் செயற்பாடுகளில் முன்னின்று சில ஊடகங்கள் செயற்பாடுகின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழமாவட்ட வேட்டபாளர் தெரிவில் சிவாஜிலிங்கம் அனந்தி போன்றவர்கள் வேட்பாளராக அறிவித்தால் அது தமது அரசியல் வாழ்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும் என்று கருதிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்கள் 6 மாதங்களுக்கு முன்னர் திட்டமிட்டு இவருவரையும் பாராளுமன்ற வேட்பாளராக அறிவிக்ககூடாது என்ற நோக்கில் தமது இரகசிய வேலைகளை மேற்கொண்டு வந்துள்ளனார்.

இதற்கு சில சர்வதேச நாடுகளின் ஆசிர்வதாமும் கிடைந்துள்ளது இருவரும் வந்தால் சர்தேசத்தில் போர்குற்ற விசாரனைகளை மேலும் அதிகரிக்க வாய்பு ஏற்படும் எனவே இருவரையும் வடமாகாண சபையுடன் முடக்கும் திட்டத்துக்கு ஆதாரவு வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வறான நிலையில் பதவிக்கு வரத்துடிக்கும் சில கூட்டமைப்பு உறுப்பினர்கள் தமது ஊடகங்கள் மற்றும் அரச சார்பு ஊடகங்கள் மூலம் தமிழ் தேசியத்துக்காகவும் போர்குற்றங்களை தொடர்பாகவும் வலுயுறுத்திவரும் சிவாஜிலிங்கம் அனந்தி இருவருக்கும் எதிராக போலி செய்திகளை பிரசுரித்துவருகின்றனர் என அவர்கள் தெரிவித்துள்ளனர் எவ்வாறன செய்திகளை மக்கள் நம்பவேண்டாம் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்
« PREV
NEXT »

No comments