Latest News

July 05, 2015

பெண்ணாக நடிக்கும் சிவகார்த்திகேயன்!
by Unknown - 0

இயக்குனர் சுந்தர் சி, அட்லீ ஆகிய இருவரிடமும் உதவி இயக்குனராக இருந்தவர், பாக்கியராஜ் கண்ணன். இவர் முதன்முதலாக ஒரு படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரிக்கிறார். ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

மேலும் இப்படத்தின் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.

‘காதலும், நகைச்சுவையும் கலந்த படம் என்பதால் இந்த கதைக்கு உற்ற துணையாக பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

ஒஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி ஒலி வடிவமைப்பாளராக பணிபுரிகிறார்.ஒரு படத்தின் உன்னதமான தொழில்நுட்ப கலைஞர்கள் குழு, படத்தின் வெற்றியை பெரிதளவு தீர்மானிக்கிறது. என் முதல் படத்தில், பிரசித்தி பெற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பணிபுரிவது, பெருமையாக இருக்கிறது என இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் தெரிவித்தார்.

சிவகார்த்திகேயனுக்கு, அவர் இதுவரை ஏற்றிராத ஒரு புதிய கதாபாத்திரம் அமைந்து இருக்கிறது. அவருக்கு இது, ஒரு முக்கிய படமாக இருக்கும்.

ஏனெனில் சிவகார்த்திகேயன் என்றாலே நகைச்சுவை மட்டும் தான் செய்வார், சிரமப்பட்டு தான் நடிக்கமாட்டார் என ஒரு பேச்சு உள்ளது. இந்த கருத்தை முறியடிக்கும் விதத்தில் இந்த படத்தில் பெண் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். மேலும், இதற்காக ‘ஐ’ படத்தின் மேக்கப் கலைஞரை அழைத்து வந்துள்ளார்களாம்.
« PREV
NEXT »

No comments