Latest News

July 08, 2015

தபால் மூல வாக்களிப்பு தினம் அறிவிப்பு
by admin - 0

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகளை மூன்று நாட்களுக்கு முன்னெடுக்கவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

இதன்படி ஆசிரியர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆகஸ்ட் மாதம் 3ம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளது.

ஏனைய அரச நிறுவனங்களுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆகஸ்ட் மாதம் 5ம் மற்றும் 6ம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆகஸ்ட் 17ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

« PREV
NEXT »

No comments