உலகில் குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுபவர்களது தொகையிலும் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டு வருகிறது.
ஆனால் தென் சீனாவில் குயிஸொயு பிராந்தியத்தில் லன்பா நகரிலுள்ள சி சொங் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் கிராமமொன்றைச் சேர்ந்த பார்வையற்ற ஒரேயொரு பொலிஸ் அதிகாரி, தனது கிராமத்தில் கடந்த ஒரு தசாப்த காலமாக எதுவித குற்றமும் இடம்பெறாது சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்து வருகிறார்.
கண் அழுத்த நோய் மற்றும் கண் புரை நோயால் பாதிக்கப்பட்டதையடுத்து 2002 ஆம் ஆண்டிலிருந்து கட்புலன் ஆற்றலை இழக்க ஆரம்பித்த பான் யொங் (43 வயது) என்ற மேற்படி பொலிஸ் அதிகாரி, தற்போது வெளிச்சத்தை மட்டுமே உணரும் ஆற்றலைக் கொண்டுள்ளார்.
அவர் 3 நிர்வாகக் கிராமங்கள் மற்றும் சிறிய கிராமங்களை உள்ளடக்கிய மாவட்டமொன்றின் பாதுகாப்பிற்கு பொறுப்பாகவுள்ளார்.
புகையிரத நிலையமொன்றில் அந்த பொலிஸ் நிலையம் செயற்படுகின்ற நிலையில், அந்தப் புகையிரத நிலையத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தராக பான் யொங்கின் மனைவியான தவோ ஹொங்யிங் (46 வயது) பணியாற்றி வருகிறார்.
அவர் தனது கணவருக்கு பிராந்தியமெங்கும் தினசரி பாதுகாப்புப் பரி சோதனைகளை மேற்கொள்வதற்கு உதவி வருகிறார்.
இந்நிலையில் அந்தப் பிரதேசத்தில் பான் யொங்கின் மேற்பார்வை யின் கீழ் கடந்த 10 வருட காலப் பகுதியில் பொதுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக் கும் சம்பவங்கள் மற்றும் வீதி விபத்துகள் உள்ளடங்கலாக எந்த வொரு குற்றச்செயலும் இடம்பெற வில்லை எனத் தெரிவிக்கப்படுகி றது.
No comments
Post a Comment