Latest News

July 08, 2015

20 ஆண்டை கடந்த சந்திரிக்கா அரசின் இனப்படுகொலை
by admin - 0




தற்போதையஸ்ரீலங்கா  ஜனாதிபதி மைத்திரி சிறிசேன வின் மற்றும் இனப்படுகொலையரசன் மகிந்தவின் கட்சியின் முன்னாள் ஸ்ரீலங்கா அரசின் இனப்படுகொலை அரசி சந்திரிக்காவின் ஆட்சிகாலத்தில்   1995.07.09 ஆம் திகதியன்று வட பகுதியில் பலாலி இராணுவ முகாமில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் தாம் ஏற்கனவே திட்டமிட்டிருந்த முன்னேறிப் பாய்ச்சல் இராணுவ நட வடிக்கையை வலிகாமம் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகள் ஊடாக ஆரம்பித்தனர். இராணுவத்தினரின் இந்த நடவடிக்கைக்கு உதவும் விதத்தில் இராணுவத்தினர் முன்னேற முயன்ற பகுதிகளில் விமானப் படை யினர் விமானக் குண்டு வீச்சுக்களை மேற் கொண்டனர். இராணுவத்தினர் தமது குடியிருப்புப் பகுதிகளை நோக்கி முன்னேற முயற்சிப் பதைக் கண்டு பயந்த அப்பகுதிகளிலிருந்த மக்கள் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான பிரதேசங் களுக்கு நகரத் தொடங்கினர்.

அந்த விதத்தில் தமது சொந்த இடங் களை விட்டு வெளியேறிய மக்களில் ஒரு பெரும் தொகையினர் நவாலி சென்.பீற்றேர்ஸ் தேவாலயத்தில் தஞ்சம் புகுந்தனர். அன்று மாலை வேளையில் குறிப்பிட்ட அந்தத் தேவாலயத்தை இலக்கு வைத்து ஸ்ரீலங்கா விமானப் படையினரின் புக்காறா விமானங் கள் மேற்கொண்ட விமானக்குண்டுத் தாக்குதலில் அங்கு தங்கியிருந்த  147  பொதுமக்கள் பிஞ்சு குழந்தைகள் உட்பட  அந்த இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். 150 பேருக்கு மேலானோர் காயங்களுக்கு உள்ளாகினர்.

நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயம் மீதான தாக்குதலின் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் (09.07.2015) இன்றாகும். வரலாற் றில் அந்த இரத்தக்கறை படிந்த நாளின் துன்ப, துயரங்களை இலகுவில் மறந்துவிட முடியாது. அன்றைய வேளையில் (09.07.1995) ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஆட்சியாளர் களாலும் பாதுகாப்புப் பிரிவினராலும் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலை. மூன்று குண்டு வீச்சு விமானங்கள் ஒரே நேரத்தில் இந்த கோர தாக்குதலை மேற்கெண்டன.

குறிப்பிட்ட தினத்தன்று அதிகாலையி லிருந்து பலாலி இராணுவ முகாமிலிருந் தும் அளவெட்டி, சண்டிலிப்பாய் பகுதிகளி லிருந்தும்தமிழர் வாழ்விடங்களை  நோக்கி நாற்புறமும்   ஷெல் பீரங்கி தாக்குதல்கள் மேற் கொள்ளப்பட்டன.


திடீரென வலிகாமம் தென்மேற்கு, வலி. மேற்கு, வலி.தெற்கு பகுதிகளில் உள்ள மக் கள் குடியிருப்புகளை நோக்கி காலை 5.40 மணியளவில் இருந்து மும் முனைத் தாக்குதல் ஸ்ரீலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்டன. அன்றைய தினம் காலை வலிகாமம் பகுதியில் உள்ள மக்கள் உடுத்த உடைகளுடனும் கையில் அகப்பட்ட உடைமகளுடனும்  செய்வதறியாது  தங்கள் இருப்பிடங்களை விட்டு சென்றுகொண்டிருந்தனர்.

மாட்டுவண்டிகளிலும் மிதிவண்டிகளிலும் கால்நடையாகவும் வட்டுக்கோட்டை, சங்கரத்தை, வளுக்கையாற்றுவெளி, நவாலி வீதி, நவாலி ஆனைக்கோட்டை பிரதான வீதி, சங்குவேலி, கட்டுடை மானிப்பாய் பிர தான வீதி வழியாக அவர்கள் சென்றனர். அவ்வேளையில் சகல வீதிகளிலும் எறிகணை தாக்குதல், உலங்குவானூர்தி  தாக்குதல்கள் நடந்த வண்ணம் இருந்தன. வீதிக்கு வீதி சடலங்கள், காயமடைந்த வர்களை எடுத்துச்செல்லக்கூடிய அள விற்கு வாகன வசதிகளோ, மருந்தவ வண்டிகளோ, வைத்தியசாலைகளோ இருக்கவில்லை. யாவும் செயலிழந்துவிட்ட அவலநிலை.

காயமடைந்தவர்கள் சிகிச்சையின்றி, முதலுதவிச்சிகிச்சையின்றி, இரத்தம் வெளியேறிய நிலையில் உயிரிழந்த அவலமே அதிகம் சிங்கள அதிகார வர்கத்தின் பொருளாதார தடைகளால் மருந்துகளுக்கு ஏற்பட்ட தட்டுபாடுகளே உயிரிழப்புக்களுக்கு முக்கிய காரணம் அதாவது இன்றைய ஆட்சியின் காதாநாயகியும் அன்றைய ஆதிகாரத்தின் தலைவியுமான சந்திரிக்கா அம்மையாரின் பொருளாதார தடைகளாகும். அன்றைய நாட்கள் தமிழீழ மக்களால் மறக்கமுடியாது. 

அன்றைய தினம் தமது சொந்த இடங்களைவிட்டு இருக்க வழியின்றி குடாநாட்டின் பல்வேறு வீதிகளினூடாக மக்கள் திரள் திரளாக நவாலி சென்.பீற்றர் தேவாலயத் திலும், நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் இறைவனே கதி என்று களைப்படைந்த நிலையில் தஞ்சமடைந்தனர்.ஆனால் இறைவன் என்பவன் எங்குள்ளான் என்ற கேள்வியை மக்கள் அன்று உணர்ந்தனர்.

அவ்வேளையில் ஸ்ரீலங்காவின் கொலைக் கழுகுகள் ஆகாய வழியாக  தமது அக்கினி குண்டுகள்  13 ஐ தொடர்ச்சியாக மக்கள் அடைக்கலம் தேடிய இருவேறுபட்ட மத   ஆலயங்கள் மீதும் அள்ளி வீசப்பட்டன. கக்கிய  குண்டுகள் தமிழர்கள் அடைக்கலாம் வேண்டிய கோவில்களின் உள்ளே விழுந்து அவர்களின்  'ஐயோ' என்ற அவலக் குரல்களை அப்பகுதியை அதிர வைத்துகொண்டு சென்றன  . ஸ்ரீலங்கா விமானக் குண்டு வீச்சுக் கார ணமாக 65 பேர் உடல் சிதறி பலியானதுடன்  கையிழந்து கால் இழந்து தலையிழந்து குற்றுயிராக கிடந்த கொடூரக்காட்சி இன்றும் மறக்க முடியாததாகும். இந்தக் கொடூர சம்பவத்தில் 65 பேர் உடல் சிதறி பலியானதுடன் பெரும் எண்ணிக்கையானோர் ஊனமானார்கள்.  65 மக்களை பலியெடுத்தும் 150 மக்களை காயப்படுத்தி தங்களின் இரத்த வெறிகளை முடித்து தங்களிருப்பிடம் சேரமுன் சிங்கள் அரசு தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுத தொழிட்சாலையை அழித்துவிட்டோம் என்று கூக்குரலிட்டன உண்மைதான் தமிழர்கள் அனைவரும் சிங்கள ஆட்சிபீடத்துக்கு ஆயுத தொழிட்சாலைதான்.

இன்றும் ஆட்சியில் இந்த கொடூர படுகொலை செய்த ஆட்சியாளர்கள் தமது கதிரைகளை  அலங்கரித்துக்கொண்டு இருக்கிறார்கள் அவர்களை தமிழ்தேசம் என்று மறக்காது.

நன்றி ஈழவேங்கை 

« PREV
NEXT »

No comments