வாரம் ஒரு விளையாட்டு வீரரை விவசாயி இணையம் அறிமுகம் செய்து வருகின்றது அதில் இந்த வார வீரராக தமிழர்களின் உதைபந்தாட்ட வரலாற்றில் தனக்கு என்று தனித்துமான இடத்தை பிடித்த வதிரி டையமன்ஸ் அணி வீரா் பீமா தமிழர்களின் உதைபந்தாட் வரலாற்றில் நீண்டகாலமாக முன் களவீரராக அசத்தி வரும் வடமராட்சி வதிரி டைமன்ஸ் வீரா் மதனராஜா பிறேம்குமார் பற்றி அறிமுகத்தை தாங்கி வருகிறது இது நம்மவர்.
வடமராட்சி வதிரி கிராமம் என்றல் அங்குள்ளமக்கள்அனைவரும் உடன் கூறும் வார்தை கால் பந்து ஆட்டக்காரர்களின் இடம் என்று அவ்வாறு நீண்ட வரலாற்றையும் வீரர்களையும் கொண்ட கிராமம்தான் வதிரி அங்குபல வீரா்கள் உருவாகினாலும் இன்றைய தலைமுறையினரின் நன்மதிப்பை பெற்ற மிகசிறந்த வீரா் யார் என்றால் உடன் பீமா என்று கூறுவர்கள் அந்தவகையில் அவரின் உதைபந்தாட்ட திறமை அங்கு அதிக்கம் செலுத்துகின்றது.
வதிரி தேவைராளி இந்து கல்லூரியில் கல்வி கற்ற பிறேம் குமார் தனது 12,14,16,18 ,வயது பிரிவு பாடசாலை அணியில் இடம்பிடித்து தனது திறைமையால் பல வெற்றிகளை பாடசாலைஅணிக்கு பெற்றுக் கொடுத்தார் தனது 15வயதில் வதிரி டைமன்ஸ் அணிக்கு விளையாட தகுதிபெற்றர் அன்றுதொடக்கம் இன்று வரை பீமா என்ற பெயர் உதைபந்தாட்ட ரசிகர்கள் மத்தில் பேசும்பொருளாக உலா வருகின்றது. வதிரி டைமன்ஸ் அணிக்காக அதிக கோல் அடித்தவீரா் என்ற பெருமையும் இவரை சாரும் தனது அணி் பல இக்கட்டான நிலையிலும் தனது அணிக்காக கோல் அடித்து வெற்றி பாதைக்கு அழைத்துசெல்லும் திறன் இவரின் தனித்திறைமைக்கு சான்று இவரை உருவக்குவதிலும் வழிகாட்டியாக சிறுவயது முதல் இன்றுவரை அந்த அணியின் வீரா் அரவிந்தனுக்கு முக்கிய பங்கு உண்டு இவர்கள் இருவருமே நீண்டகாலமாக டைமன்ஸ் அணியின் முன்கள வீரா்களாக விளையாடி வருகின்றனார்.
இப்படியான நமது வீரர்களை உலகுக்கு நாங்கள் அறிமுகம் செய்வதில் பெருமை கொள்வோம் அத்துடன் உங்கள் ஊர் வீரர்களை அவர்களின் வீரதிறமைகளை எமக்கு அனுப்பி வைத்தால் உலகுக்கு அவர்களை அறிமுகம் செய்து வைப்போம்
ஆக்கம் எஸ் . செல்வதீபன்
No comments
Post a Comment