ஓகஸ்ட் 17 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள தேர்தலில் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் த.தே. கூ அதிக வாக்குகளைக் கைப்பற்றும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு வேட்புமனுவினை நேற்றுதாக்கல் செய்த முதன்மை வேட்பாளர் சம்பந்தன் தமிழ் மக்களுக்கு இந்த அழைப்பினை விடுத்திருந்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஓகஸ்ட் 17 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள தேர்தலில் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் த.தே. கூ அதிக வாக்குகளைக் கைப்பற்றும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. எனவே வடக்கு -கிழக்கு மக்கள் ஓரணியில் திரளவேண்டும். இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள எமது நிலங்களை மீட்டு தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்ள எதிர்வரும் நாடாளுமன்ற தேர்லை நல்லதொரு வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும்.
வடக்கு - கிழக்கிலுள்ள யாழ்ப்பாணம் , வன்னி, திருகோணமலை , மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய 5 தேர்தல் மாவட்டங்களில் அம்பாறை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர் பட்டியல் இன்னும் நிறைவுக்கு வராத காரணத்தினால் அம்பாறையில் இன்னமும் வேட்புமனு தாக்கல் செய்யப்படவில்லை.
எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளது. கடந்த 8 ஆம் திகதி காட்டாட்சிக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்தனர். எனவே அனைவரும் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து அதிக வாக்குகளுடன் பேரம்பேசும் சக்தியாக நாம் மாறவேண்டும். இதனடிப்படையிலேயே நாம் எமது உரிமைகளைப் பெறமுடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments
Post a Comment