Latest News

July 07, 2015

மஹிந்த ராஜபக்ஷ பூமொட்டு சின்னத்தில் போட்டி?
by Unknown - 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்பு குழுவினர் “எமது இலங்கை சுதந்திர முன்னணி” (Our Sri Lanka Freedom Front) என்ற கட்சியில் பூமொட்டு சின்னத்தில் போட்டியிட  தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட வழங்கிய அனுமதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிடவில்லை என்பதும், இந்த முடிவு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முடிவு அல்ல என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க வெளியிட்டுள்ள கருத்தும் மஹிந்த சார்பு குழுவின் தீர்மானத்துக்கான தூண்டல் காரணியாகலாம் என அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

மைத்திரிபால சிறிசேனவின் பாணியில் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதாக நேற்றைய மாத்தறை கூட்டமொன்றின் போது முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும கூறியிருந்தார்.

மைத்திரிபால சிறிசேன கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது இறுதி நேரத்தில் திடீர் முடிவொன்றை எடுத்து பெரும் அதிர்ச்சியை நாட்டுக்குக் கொடுத்தார். அதேபோன்று, வேட்புமனுத் தாக்கல் செய்யும் இறுதி வேளையில் மஹிந்த சார்பு குழுவினர் இந்த முடிவை அறிவிக்க இருக்கின்றார்களா? என்பது மக்கள் மத்தியிலுள்ள பொதுவான கருத்தாகும்.
« PREV
NEXT »

No comments