முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவாக அனுராதரபுத்தில் நடத்தப்படவிருந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 9ம் திகதி அனுராதபுரத்தில் இந்தக் கூட்டம் நடத்தப்படவிருந்தது.
எதிர்வரும் 13ம் திகதி வரையில் அதாவது வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படும் வரையில் கூட்டத்தை ஒத்தி வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஸவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டுமெனக் கோரி போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, தினேஸ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டவர்கள் இந்தக் கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்தனர்.
No comments
Post a Comment