வன்னியில் இருந்த ஒரு குற்றத்துக்காக கிராம சேவையாளர் பதவியே இழக்கும் அப்பாவி தமிழர்கள்
இலங்கை அரசங்கத்தின் பரீட்சையில் தோற்றி சித்தியடைத்து தேரிவு செய்யப்பட்ட 50 மேற்பட்ட தமிழர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு அவர்களை புனர்வாழ்வு பெற்றுக்கொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுக்கின்றது
இறுதி யுத்தத்தின் போது வன்னியில் வாழ்ந்த காரணத்தினாலும் இவர்களின் உறவுகள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தமையாலும் இவர்களுக்கு பாதுகாப்பு தரப்பினரால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பின் அமைச்சு இந்த உத்தரவை பிறப்பித்ததாகவும் இதனால் இறுதி யுத்தத்தின் போது அங்கு வாழ்த அப்பாவிகளை எதுவிதமான விசாரனைகள் இன்றி நீங்கள் புனர்வாழ்வு பெறவேண்டும் என இராணுவத்தினார் கடும் உத்தரவு வழங்கியுள்ளனர்.
வடமாகாணத்தில் 50 மேற்பட்ட புதிய கிராம சேவையாளர்கள் இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டு புனர்வாழ்வுக்கு அனுப்பட்டுள்ளனர்.
புதிய அரசங்கம் நல்லிணக்கம் என்று சர்வதேச நாடுகளில் போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டுவருகின்றது இன் நிலையில் வறுமையில் வடும் மற்றும் தொழில் இன்றி தவிக்கும் அப்பாவிகளை அரசங்கம் இனரீதியான பழிவாங்களை மேற்கொண்டு வருகின்றது.
இந்த நிலையில் சிலர் புனர்வாழ்வுக்கு செல்ல சென்றுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கிராம சேவையாளர்கள் பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏம் பிகளிடம் உதவி கோரியும் அவர்களும் அரசு சார்பு கொள்கையிலேயே உள்ளனர்.
புலிகளுக்கு மட்டும் தான் இதுவரை காலமும் புனர்வாழ்வு அளித்து வந்த சிங்கள அரசுகள் இன்று அவர்களின் குடும்பங்களுக்கும் அப்பாவி பொதுமக்களுக்கும் புனர்வாழ்வு அளிக்கவுள்ளது.
செய்தி எஸ்.செல்வதீபன்
No comments
Post a Comment